நியாயாதிபதிகள் 21
1 இஸ்ரவேலர் மிஸ்பாவிலே இருக்கும்போது: நம்மில் ஒருவனும் தன் குமாரத்தியைப் பென்யமீனருக்கு விவாகம்பண்ணிக்கொடுப்பதில்லை என்று ஆணையிட்டிருந்தார்கள். 2 ஆகையால் ஜனங்கள் தேவனுடைய வீட்டிற்குப்போய், அங்கே தேவசந்நிதியிலே சாயங்காலமட்டும் இருந்து, சத்தமிட்டு, மிகவும் அழுது: 3 இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே, இன்று இஸ்ரவேலில்…